திருச்செங்கோட்டில் மக்கள் நலத்திட்ட பணிகள் துவக்கம்

திருச்செங்கோட்டில் மக்கள் நலத்திட்ட பணிகளை மதுரா செந்தில்,ஈஸ்வரன் MLA, நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தனர்

Update: 2024-01-31 07:18 GMT
திருச்செங்கோடு நகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2 36 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் பொதுக் கழிப்பிடம் திறப்பு விழா, மற்றும் சூரியம்பாளையம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சூரியம்பாளையம் செங்குந்தர் பாவாடி பஞ்சாயத்தார் ரூ.7 லட்சம் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 21 லட்சம் மதிப்பில் ஆண்களுக்கான கழிப்பிடம் மற்றும் 15 வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 35 லட்சம் மதிப்பில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின்படி கழிவுநீர் உறிஞ்சு வாகனம் ஆகியவை  தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினருமான மதுரா செந்தில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், நகராட்சி ஆணையாளர் சேகர்,நகராட்சி பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் செந்தில்குமரன், நகர் மன்ற உறுப்பினர்கள் திவ்யா வெங்கடேசன், ரமேஷ், ரவிக்குமார், மனோன்மணி சரவணன் முருகன், தாமரைச்செல்வி மணிகண்டன், ராதா சேகர், செல்லம்மாள் தேவராஜ்,செல்வி ராஜவேல், ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News