விபச்சாரத்தில் ஈடுபடும் திருநங்கைகள் மீது நடவடிக்கை - ஆட்சியரிடம் மனு
நெடுஞ்சாலை ஓரங்களில் விபச்சாரத்தில் ஈடுபடும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் மானேஷா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.;
Update: 2024-03-12 07:49 GMT
வழக்கறிஞர் மானேஷா
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை சந்தித்த பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர், வழக்கறிஞர் மானேஷா மனு அளித்தார், இதனை தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முதல் நான்கு ரோடு வாலிகண்டபுரம் வரை தேசிய நெடுஞ்சாலைஓரங்களில்,பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து, இரவு நேரங்களில் திருநங்கைகள் பலர் பாலியல் தொழில் ஈடுபடுகின்றனர், இவர்களது செயல் வாகன ஓட்டிகள் மற்றும் இளைஞர்களிடையே சபலத்தை தூண்டும் விதமாக உள்ளது, எனவே அவர்களது வாழ்க்கை கருதி சமூக நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் திருநங்கைகளின் பாலியல் தொழிலை தடுக்க வேண்டும் என கேட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.