பெரம்பலூர் மாவட்டம் 8ம் இடம்

10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளின் படி பெரம்பலூர் மாவட்டம் 94.77% பெற்று மாநில அளவில் 8ம் இடம் பிடித்துள்ளது.

Update: 2024-05-11 02:32 GMT

10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளின் படி பெரம்பலூர் மாவட்டம் 94.77% பெற்று மாநில அளவில் 8ம் இடம் பிடித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி காலை 10 மணி அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டதில் 4,289 மாணவர்களும், 3,576 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 865 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதினர். இவர்களில் 3,985 மாணவர்களும் 3,469 மாணவிகளும் என 7,454 மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 94.77 சதவீதம் பெற்று 8.வது இடத்தைப் பெற்றுள்ளது.அதேபோல அரசு பள்ளிகளில் பயின்ற 2,477 மாணவர்கள் மற்றும் 2,082 மாணவிகள் என மொத்தம் 4,559 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில்,அவர்களில் 2,195 மாணவர்களும் 1,987 மாணவிகளும் என மொத்தமாக 4,182 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் பொது பிரிவில் மாவட்ட அளவில் 304 மாணவர்களும் 107 மாணவிகளும் என 411 பேர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். இவர்களில் 282 மாணவர்களும் 95 மாணவிகளும் என 377 மாணவர்கள் அரசு பள்ளிகளிலும் 34 பேர் தனியார் பள்ளிகளிலும் பயின்றி தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் கடந்த 2021-2022 கல்வியாண்டில் 97.15% பெற்று 2ம் இடத்தையும், 2022-23 கல்வி ஆண்டில் 97.67% பெற்று முதலிடத்திலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News