பெரம்பலூர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 269மனுக்கள் பெறப்பட்டது
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 269 மனுக்கள் பெறப்பட்டது.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 269 மனுக்கள் பெறப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்ரவரி 12ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 269 மனுக்கள் பெறப்பட்டது.
முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் போன்ற நிகழ்வுகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மேலும். 30 நாட்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள மனுக்களின் நிலை குறித்தும், அந்த கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
அலுவலர்களைத் தேடி மனுக்களை கொடுக்கும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.