பெரம்பலூரில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவர் பலி - மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சுகாதார சீர்கேட்டால் மர்ம காய்ச்ச்ல் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2024-03-09 13:46 GMT

மர்ம காய்ச்சலுக்கு ஒருவர் பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவர் பலியானதால் சுகாதாரப்பணிகளை சீர்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட விகளத்தூர், ராயப்பநகர், பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் 27 வயதான கார்த்திக் மருத்துவமனையில் உயிரிழந்ததைஅறிந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். உயிர்பலி வாங்கும் மர்ம காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை அளித்து, நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்கள், ராயப்பநகர் பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் குடிநீர் மாசடைந்து, காய்ச்சல் பரவி இருக்கலாம் என்று குற்றம்சாட்டினர். மேலும் அப்பகுதியில் உள்ள கழிவு நீரை சுத்தம் செய்து சீரமைத்து தர வேண்டும்  என்றும் கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

Similar News