பெரிய மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் முன்புறமுள்ள பூக்குழி குண்டத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் பூ (தீ )மிதித்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.;

Update: 2024-04-10 10:09 GMT
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் முன்புறமுள்ள பூக்குழி குண்டத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் பூ (தீ )மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்....*

 சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோவிலின் பூக்குழி திருவிழா கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினந்தோறும் ஆறு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் 13 நாட்கள் நடைபெறும் பூக்குழி திருவிழாவின் முக்கிய நிகழ்வான 12 ஆம் நாள் திருவிழாவான பூக்குழி இறங்கும் வைபவம் இன்று நடைபெற்று வருகிறது.

Advertisement

இதற்க்கு முன்னதாக கடந்த 12 நாட்களாக விரதம் இருந்து வந்த பக்தர்கள் ஆண்கள்,பெண்கள் உட்பட சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து தங்கள் வழிபாட்டை செய்து வருகின்றனர். பூக்குழியில் இறங்குவதற்க்கு முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்தும் மஞ்சள் நீரை உடம்பில் ஊற்றி கொண்டும் நான்கு ரதவீதிகளில் வழியாக சுற்றி வந்து காலையிலிருந்து வளர்க்கப்பட்ட அக்னி குண்டத்தில் பூமிதித்து வழிபட்டனர்.பக்தர்கள் பூக்குழி இறங்குவதை காண ஆயிரகணக்கான பக்தர்கள் அக்னி குண்டத்தை சுற்றி குவிந்துள்ளனர்.

பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளது. இன்று நடைபெறும் பூக்குழி திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 30 ஆயிரத்திற்க்கு மேற்பட்டோர் மஞ்சள் காப்பு அணிந்து பூ இறங்கி வருகின்றனர்.

Tags:    

Similar News