திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பயிற்சி பட்டறை

பெரம்பலூர் திமுக அலுவலகத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடந்த பெரியார் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-19 03:01 GMT

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் திராவிடர் கழகம் நடத்தும் பெரியார் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது, திராவிடக் கழகத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்மாவட்டச் செயலாளர் விஜயேந்திரன் வரவேற்புரை ஆற்றினார் திராவிடர் கழகத்தின் தலைமை கழக அமைப்பாளர் சிந்தனைச் செல்வன் துவக்க உரையாற்றினார், மாநில இளைஞரணி செயலாளர் பொன்முடி முகவுரை ஆற்றினார், இந்த பயிற்சி பட்டையில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில்,கூட்டத்தில் பங்கேற்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இதில் நடைபெறும் வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது, கூட்டத்தில் தந்தை பெரியார் ஒரு அறிமுகம், பார்ப்பனப் பண்பாட்டு படை எடுப்புகள், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி சாதனைகள், மந்திரமா, தந்திரமா, அறிவியல் விளக்கம், இந்துத்துவா தந்தை பெரியாரின் பெண் உரிமை சிந்தனைகள் என்ற தலைப்புகளில் வகுப்புகள் நடைபெற்றனஇந்த வகுப்புகளை ஆசிரியர் அழகிரிசாமி, முனைவர் அன்பழகன், எழுத்தாளர் வில்வம் . விஜயேந்திரன், முனைவர் துரை சந்திரசேகரன், ஆகியோர் வகுப்புகளை நடத்தினார்கள், இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், திமுக மாவட்ட செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழுதலைவருமான ராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு, சிறப்புரை வழங்கி தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் நகர தலைவர் அக்ரி ஆறுமுகம் நகரத் துணைச் செயலாளர் அண்ணாதுரை மாநில இளைஞரணி துணை செயலாளர் பொதுக்குழு உறுப்பினர் அரங்கராசன் மாவட்ட அமைப்பாளர் துரைசாமி அமைப்பாளர் சர்புதீன், நகர செயலாளர் ஆதிசிவம்,மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழரசன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் தங்க சிவமூர்த்தி.மாவட்டத் தலைவர் நடராசன், மாவட்டச் செயலாளர்கள் மருத்துவர் லகாந்தி, மற்றும் முகுந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சின்னசாமி உள்ளிட்ட திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News