அரசு பள்ளிமைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி - ஆட்சியரிடம் மனு

Update: 2023-12-14 08:39 GMT

மனு அளிக்க வந்தவர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அவிநாசியில் அரசு பள்ளி மைதானத்தில் நடை மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் மாணவர்கள் மற்றும் உடற்பயிற்சி , நடை பயிற்சி மேற்கொள்வோர் சார்பாக மனு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அவிநாசி நகர மக்கள் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு வந்தனர்.

Advertisement

ஆனால் கடந்த ஒரு வருட காலமாக அங்கு நடை பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர் தடை விதித்திருப்பதாகவும், அவிநாசி நகர் பகுதியில் உள்ள முதியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதற்கும் , இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்கும் உள்ள ஒரே இடத்தையும் பயன்படுத்த பள்ளி தலைமை ஆசிரியர் தடை விதிப்பதாகவும், இதனால் விளையாட்டு பயிற்சி மேற்கொள்பவரும் , வயதானவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும் சிரமம் ஏற்பட்டு வருவதால் மீண்டும் பள்ளி மைதானத்தை பயன்படுத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவிநாசி பகுதி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் உடற்பயிற்சி நடைபயிற்சி மேற்கொள்வோர் சார்பாக மாவட்ட ஆட்சியரிடமும் , முதன்மை கல்வி அலுவலரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News