மெதுவாக சென்ற அரசு பஸ் கண்ணாடி உடைத்தவர் கைது
கள்ளகுறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் மெதுவாக சென்ற அரசுபேருந்தின் கண்ணாடியை உடைத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுனராக இருப்பவர் பச்சையப்பன், 32; நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ் தடம் எண் 18 டி ஓட்டிக் கொண்டு பாடியந்தல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இரவு 7:50 மணி அளவில் திம்மச்சூர் பாஸ் நிறுத்தம் அருகே நின்ற போது, பஸ்சில் பயணம் செய்த கோமாலுாரைச் சேர்ந்த சின்னசாமி மகன் சுரேஷ், 37; பஸ்சை இவ்வளவு மெதுவாக ஓட்டி செல்கிறாயே என கேட்டு, பஸ்சிலிருந்து கீழே இறங்கி கல்லால் பஸ்சில் பின்பக்க கண்ணாடியை உடைத்தார்.
இதில் பஸ்சில் பயணம் செய்த பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராமன் மனைவி வளர்மதி, 48; தலையில் காயமடைந்து மயங்கினார். நடத்துனரான காமராஜ், 56; வளர்மதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது, சுரேஷ் கல்லை எடுத்து நடத்துனரை தாக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகு றித்து காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.