அரூர் அருகே இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை கடத்திச் சென்றவர் கைது
கீரைப்பட்டி குடுமியாம்பட்டி செல்லும் சாலையில் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் மதுபானங்கள் கடத்திச் சென்றவர் கைது;
Update: 2024-03-09 11:32 GMT
காவல்துறை விசாரணை
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் காவல்நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் ரோந்து பணி சென்றனர். அப்போது கீரைப்பட்டி குடுமியாம்பட்டி செல்லும் சாலையில் உள்ள அரசு பள்ளி அருகே இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் மதுபாட்டில்களை கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வண்டியை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தபோது அவர் பாப்பிரெட்டிப்பட்டி பே.தாதம்பட்டியை சேர்ந்த சங்கர், என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 23,500 மதிப்பிலான 168 மதுபாட்டில்களையும் 10 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.