திருப்புவனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் எழுந்தருளிய பெருமாள்

திருப்புவனத்தில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் எழுந்தருளிய பெருமாள் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-04-14 13:47 GMT

வைகை ஆற்றில் இறங்கிய பெருமாள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தேரோடும் வீதியில் அமைந்துள்ள பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு 126 வது சித்திரை திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இன்று 2ம் நாள் திருவிழா நடைபெற்றது. அதிகாலை 5.45 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் பச்சை பட்டு உடுத்தி அழகர் கோலம் பூண்டு வைகை ஆற்றில் எழுந்தருள ஊர்வலமாக கிளம்பினார். வழி நெடுகிலும் பல்வேறு இடங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 9.30 மணிக்கு பக்தர்களின் "கோவிந்தா கோவிந்தா " கோஷத்தின் இடையே ஆற்றில் இறங்கினார்.

வைகை ஆற்றில் நீர் வரத்து இல்லாத நிலையில் தங்க நிற குதிரை வாகனத்தில் அழகர் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் பலரும் சர்க்கரை தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பின் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் பாலகிருஷ்ண பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். நாளை ( திங்கள் கிழமை) இரவு ஏழு மணிக்கு வீரபத்திர சுவாமி கோயிலில் இருந்து புஷ்ப பல்லக்கில் பவனி வருகிறார். நாளை மறு நாள் செவ்வாய் கிழமை உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை யாதவர் பண்பாட்டு கழக தலைவர் சீனிவாசன், செயலாளர் கோவிந்தராஜன். பொருளாளர் லட்சுமண பிரபு, ஸ்ரீபாலகிருஷ்ண பெருமாள் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News