தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் மனு

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-05-28 02:20 GMT

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் கொள்முதல் நிலைய பணியாளர்களுக்கு நான்கு மாத கால சம்பளம் வழங்கப்படாதது, கடந்த 40 ஆண்டு காலமாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதனை திடீரென நிறுத்தியது ஆகியவற்றிற்கு காங்கிரஸ் கட்சி சார்புடைய தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரின் தலைமையில் ஏராளமான தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருவாரூர் மாவட்டம் முதுநிலை மண்டல மேலாளரை சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவினை அளித்தனர்.
Tags:    

Similar News