திருவிழா நடத்துவதற்கு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை மனு
வேடசந்தூா் அருகே கோயில் திருவிழா நடத்துவதற்கு இடையூறாக உள்ள சிலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
Update: 2024-04-30 05:01 GMT
வேடசந்தூா் அருகே கோயில் திருவிழா நடத்துவதற்கு இடையூறாக உள்ள சிலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த டொக்குவீரன்பட்டி கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் ஆகிய தெய்வங்களுக்கான கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வழிபாடு நடத்துவதற்கும், திருவிழா நடத்துவதற்கும் சிலா் இடையூறு செய்கின்றனா். இதனால், கடந்த 5 ஆண்டுகளாக திருவிழா நடத்த முடியாத நிலை உள்ளது. இதுதொடா்பாக வட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டபோது, பிரச்னை ஏற்படுத்த மாட்டோம் என உறுதியளித்துச் சென்றனா். ஆனால், அதற்கு மாறாக தற்போதும் இடையூறு செய்கின்றனா். எனவே, இடையூறாக உள்ள அந்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எங்கள் கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழா நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.