அடிப்படை வசதிகள் கேட்டு மனு
அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-05 09:09 GMT
அடிப்படை வசதி கேட்டு மனு
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த குடியிருப்போர் முன்னேற்ற சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
தார் சாலைகள் மற்றும் கழிவு நீர் ஓடைகள் அமைத்தல், கழிவுநீர் ஓடைகள் சுத்தம் செய்தல் தொடர்பாக மனு அளித்தனர்.எங்கள் பகுதியில் சாலை ரோடு சாக்கடை என எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. தெரு விளக்குகள் இல்லாததால் விஷ ஜந்துக்கள் கடித்து பலர் காயமடைகின்றனர் என்று தெரிவித்தனர்.