இருக்கன்குடி கோவில் பரம்பரை அறங்காவலர் குழுவை கலைக்க கோரி மனு

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி கோவிலில் பரம்பரை அறங்காவலர் ராமமூர்த்தி தலைமையில் செயல்படும் குழுவை கலைக்க வலியுறுத்தி எஸ்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2024-02-03 08:42 GMT
மனு அளிக்க வந்தவர்கள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் பல வருடங்களாக பரம்பரை அறங்காவலராக ராமமூர்த்தி என்பவர் இருந்து வருகிறார்.

என்றும், இவர் தலைமையில் உள்ள குழு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பல ஊழல்களை செய்து வருவதாகவும், மேலும் முடி கணிக்கையிலும் பல கோடி ஊழல் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு இருப்பதாகவும் இருப்பினும் அரசு அதிகாரிகளை கைக்குள் வைத்துக்கொண்டு இவர் தொடர்ந்து அறங்காவலராக தொடர்வதாகவும்,

இது சம்மந்தம்மாக அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரங்காவலர் ராமமூர்த்தி மற்றும் அவர்களது குழுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதை சரி செய்ய தற்போது உள்ள பரம்பரை அறங்காவலர் பதவியை நீக்கிவிட்டு அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த அறங்காவலர் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இருக்கன்குடி கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லாவை சந்ததித்து உரிய நடவடிக்கை என்றும் கூறி கோரிக்கை மனுவினை அளித்தனர்.

Tags:    

Similar News