குடியிருப்புகளை அகற்றுவதை தடுத்த நிறுத்த கோரிக்கை

காரைக்குடியில் குடியிருப்புகளை அகற்றுவதை நிறுத்தக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்

Update: 2024-03-04 17:44 GMT

ஆட்சியர் அலுவலகத்தில் மனு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி யூனியனுக்குட்பட்ட சூடாமணிபுரம், பாண்டிகோயில் தெருவின் பின் பகுதியில் இலுப்பக்குடி சுயம்புரகேஸ்வரர் ஆலயதேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருவதாகவும், தேவஸ்தானத்திற்கு இடவரி கட்டி அவ்விடத்தில் வீடுகள் கட்டி வீட்டு வரி, மின் இணைப்பு, ரோடு வசதிகள், குடிநீர் இணைப்புகள் முதலானவைகளை பெற்று மூன்று தலைமுறைகளாக குடியிருந்து வருவதாகவும் தற்போதைய காரைக்குடி நகராட்சி நிர்வாகம் சுமார் 200 குடும்பங்களுக்கு ஏழு நாட்களில் வீடுகளை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் வழங்கியதாகவும், குடியிருப்புகளை காலி செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டுமெனவும், அதே பகுதியில் நிரந்தரமாக வசிப்பதற்கு வழிவகை செய்து தர வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.
Tags:    

Similar News