சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த அழுத்த தின விழா
சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த அழுத்த தின விழா. மக்களுக்கு விழிப்புணர்வு.;
Update: 2024-06-14 07:25 GMT
ரத்த அழுத்த தினவிழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வாழமுடியில் உள்ள ஸ்ரீரங்க பூபதி செவிலியர் கல்லூரி சார்பில் உலக ரத்த அழுத்த தின விழா சத்தியமங்கலம் ஆரம்ப சுகா தார நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு டாக்டர் பவித்ரா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவனத்தின் செய லாளர் ஸ்ரீபதி கலந்து கொண்டு பேசினார். விழா வில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் சரிபார்க்கப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீரங்க பூபதி செவிலியர் கல்லூரி முதல்வர் மாலதி, உதவி பேராசிரியர்கள் சவுந்தர்யா, அருணா, லாவன்யா உள்பட ஆரம்ப சுகாதார பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.