திருப்பூர் ஆட்சியரகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு

திருப்பூர் ஆட்சியரகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்;

Update: 2024-04-01 11:14 GMT

மனு அளிக்க வந்த விவசாய சங்கத்தினர்

கல் குவாரிகளில் இருந்து இயக்கப்படும் கிரஷர் மற்றும் எம் சாண்ட் டிப்பர் லாரிகளை தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துவராஜூவை நேரில் சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அந்த கோரிக்கை மனுவில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவை தொகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் அங்கு கிரஷர் மற்றும் எம்சாண்ட் எடுத்துச் செல்லப்படும் டிப்பர் லாரிகள் 200க்கு மேல் இயக்கப்பட்டு வரக்கூடிய நிலையில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் எடுத்துச் செல்லலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும்,

,  எனவே தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் அவற்றை சோதனைக்கு உள்ளாக்க வேண்டும் எனவும் , அதேபோல் பெரும்பாலான கல் குவாரிகள் அரசியல் கட்சியினரின் பிரமுகர்களால் நடத்தப்படுவதால் அவை இது போன்ற செயல்களுக்கு பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால் அமலாக்க துறையினர்,

மற்றும் வருமானத் துறையினர் சோதனை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர். மேலும் கல்குவாரிகளில் அரசால் தடை செய்யப்பட்ட அளவுக்கு அதிகமான வெடிபொருள்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News