கோழி கழிவுகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து மனு
பேகம்பூர் அருகே கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அச்சத்தில் இருந்து வருகிறோம். என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொது மக்கள்.
By : King 24x7 Angel
Update: 2024-02-20 05:53 GMT
திண்டுக்கல் பேகம்பூர் அருகே பாத்திமா நகர், சி கே சி எம் நகர், கரீம் நகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது இதன் அருகே சில தனியார் நிறுவனங்கள் கோழி கழிவுகளை பயன்படுத்தி அரைத்து வருகின்றனர். இந்த கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அச்சத்தில் இருந்து வருகிறோம். இதுகுறித்து தாலுகா காவல் நிலையம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனர்.