இழப்பீட்டு தொகையை வழங்கக்கோரி 5 கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

சிமெண்ட் ஆலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதில் இழப்பீட்டு தொகையை வழங்கக்கோரி ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2023-10-31 05:03 GMT

மனு அளிக்க வந்த கிராம மக்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம், நெரிஞ்சிகோரை, அஸ்தினாபுரம், பெரியநாகலூர், சீனிவாசபுரம் உள்ளிட்ட 5 கிராம பொதுமக்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சிமெண்ட் ஆலையால் குறைந்த விலைக்கு நிலம் கையகபடுத்தபட்டதாவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஏக்கர் ஒன்றிக்கு 6 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு சிமெண்ட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் நவம்பர் 28 ஆம் தேதி கருத்துகேட்பு கூட்டம் நடத்த அரசு சிமெண்ட் ஆலை நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எனவே எங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்கிவிட்டு கருத்துகேட்பு கூட்டம் நடத்தலாம் என்றும், அதுவரை கருத்துகேட்பு கூட்டம் நடந்தகூடாது என எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவிக்கபட்டு இருந்தது. இதனையடுத்து அந்த மனுவினை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணாவை சந்தித்து அப்பகுதி பொதுமக்கள் வழங்கி சென்றனர்.


Tags:    

Similar News