கனிம வளங்களை பாதுகாக்க கோரி மமகவினர் ஆட்சியரிடம் மனு.
Update: 2023-12-12 04:46 GMT
மனு அளிக்க வந்த மமகவினர்
மனிதநேய மக்கள் கட்சி சார்பில், கட்சியின் மாவட்ட தலைவர் குதிரத்துல்லா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில், கனிம வளங்களை கொள்ளை போவதை தடுத்து நிறுத்தி வேண்டியும் பெரம்பலூர் மாவட்டத்தை வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளித்து இருப்பதாகவும், மேலும் ஆறு குளம் உள்ளிட்டவற்றை நாம் அமைத்தாலும், மலைகளை நாம் அமைக்க முடியாது ஆகவே இயற்கையாக உள்ள மலைகளை பாதுகாக்கவும் கனிம வளங்களை பாதுகாக்கவும், பெரம்பலூர் மாவட்டத்தை வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.