டாஸ்மார்க் கடைகளை அப்புறப்படுத்த ஆட்சியரிடம் மனு.

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள 3- டாஸ்மார்க் கடைகளை அப்புறப்படுத்த வன்னியர் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-07-02 04:10 GMT

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள 3- டாஸ்மார்க் கடைகளை அப்புறப்படுத்த வன்னியர் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் சுற்று வட்டார பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் 3 செயல்பட்டு வருகிறது. டாஸ்மார்க் கடையில் மது வாங்கி குடிக்கும் குடிமகன்கள், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை அண்மைக்காலமாக ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பெண்கள், கல்லூரி மாணவிகள், சிறார்கள் போன்றோர்கள் அச்சத்துடனையே பேருந்து நிலையத்திற்கு சென்று வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மூன்று கடைகளையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கூறி வன்னியர் மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சிதம்பரம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்திற்கு வந்த கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக கட்சி நிர்வாகி விஜயேந்திரன் அளித்த பேட்டியில், வன்னியர் கட்சி சமுதாயம் சார்ந்த கட்சியாக இருந்தபோதும், தமிழகத்தில் உள்ள அனைத்து ஜாதியினருக்கும் எந்த பிரச்சனை என்றாலும், முன் நின்று பிரச்சனைக்காக போராடும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News