பாதிக்கபட்ட மக்காசோள பயிருடன் கலெக்டரிடம் மனு
கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்;
Update: 2024-01-30 09:31 GMT
மனு அளித்த விவசாயிகள்
அரியலூர் மாவட்டம் பளிங்காநத்தம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் நெல்பயிர் சாகுபடி செய்வது வழக்கம். இந்நிலையில் புள்ளம்பாடி வாய்காலில் தண்ணீர் வராத காரணத்தால் மக்காசோளம் பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் இளம் பயிராக இருக்கும்போது அதிக மழையாலும், படைப்புழு தாக்குத்தாலும் 70 சதவீத முதல் 100 சதவீத மக்காசோள பயிர்கள் பாதிப்படைந்து உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எனவே எங்களுக்கு உரிய நிவாரணமும் மற்றும் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணாவை சந்தித்து மனு அளித்தனர். இதில் அக்கிராம விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.