ஆலங்குளம் அரசு கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகள் வழங்க கோரி மனு
அரசு கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகள் வழங்க கோரி மனு வழங்கப்பட்டது.;
Update: 2024-03-12 05:40 GMT
அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மனு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு காம்பவுண்ட் சுவர், மெயின் ரோட்டில் இருந்து கல்லூரி வரை தார் சாலை, கூடுதல் பாடப்பிரிவுகள் துலக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தென்காசி முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை மனு வழங்கினார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நிகழ்ச்சிகள் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.