ராமநாதபுரம் கிராம மக்கள் ஒன்றிய குழு தலைவரிடம் மனு

ராமநாதபுரம் தில்லையந்தல் ஊராட்சியின் 500 பிளாட் கிராம மக்கள் திருப்புல்லாணி ஒன்றிய குழு தலைவரிடம் மனு.

Update: 2024-02-05 11:40 GMT

 கிராம மக்கள் ஒன்றிய குழு தலைவரிடம் மனு

ராமநாதபுர திருப்புல்லாணி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட 500 பிளாட் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து திருப்புல்லாணி ஒன்றிய குழு தலைவரிடம் மனு வழங்கினர். மனுவில் கூறியதாவது. 500 பிளாட் கிராமத்தில் அடிப்படை தேவையான தெரு விளக்கு சாலை வசதிகள் மற்றும் ரேஷன் கடைகள் புதிய கட்டிடம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை பலமுறை முன் வைத்துள்ளோம் . ஊராட்சி மன்ற தலைவர் மக்களின் கோரிக்கையை ஏற்காமல் புதிதாக உயர்ரக குடிநீர் தொட்டி கட்டுமானப்பணி அமைப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறார். எங்கள் பகுதியில் ஏற்கனவே உயரக தொட்டிகள் மற்றும் அனைத்து வீடுகளிலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 25 லட்சம் ரூபாய் மூலம் பைப் லைன்கள் வீட்டுக்கு வீடு அமைக்கப்பட்டு உள்ளன. மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்று வரை தண்ணீர் கூட முறையாக வருவதில்லை என்றும், எங்கள் பகுதி வீட்டு கிணற்றில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் வருகின்றது. எனவே எங்களுக்கு உயர்ரகத் தொட்டி பணியை நிறுத்திவிட்டு அடிப்படை தேவையான சாலை வசதி தெரு விளக்குகள் மற்றும் ரேஷன் கடைகள் புதிய கட்டிடம் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர். 500 பிளாட் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News