டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு
ஆர்.ஆர். நகரிலிருந்து கன்னிசேரி கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் அருகே எத்திலப் பன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இந்தநிலையில் ஆர்.ஆர். நகரிலிருந்து கன்னிசேரி கிராமத்திற்கு செல்லும் மெயின் சாலையில் அரசு மதுபானக்கடை பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
இந்த மதுபானக்கடைக்கு அருகே பள்ளி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது என்றும், மேலும் எத்திலப்பன்பட்டி மற்றும் அருகில் உள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் விருதுநகரில் உள்ள பள்ளி, மற்றும் கல்லூரிகளில் படித்து வருவதாகவும், தினமும் கல்வி பயில சென்று மாலையில் வீடு திரும்பும்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுபானக்கடையில் குடிமகன்கள் குடித்துவிட்டு அந்த வழியாக வரும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளையும் பெண்களையும் கேலி கிண்டல் செய்து வருவதாகவும், அநாகரிமான முறையில் நடந்துகொள்வதால் ஒரு விதமான அச்ச உணர்வோடுதான் வீடுகளுக்கு திரும்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று கூறி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் தெய்வானை தலைமையில் 100க்கும் மேற்பட்ட எத்திலப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் மனு அளித்தனர்.