வடிகாலை தூர்வாரக்கோரி ஆட்சியரிடம் மனு

தில்லையாடி ஊராட்சியில் தனது வீட்டு கொல்லைபுறத்தில் உள்ள வடிகால் தூர்வாரப்படாததால் மழை நீரால் விவசாயம் அழிந்து விட்டதால் இழப்பீடு வழங்க கோரியும், வடிகாலை தூர்வாரக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி கோரிக்கை மனு அளித்தார்.

Update: 2024-02-13 05:29 GMT

குறைதீர் முகாம் 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சரவணன் என்பவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் வடிகால் வசதி மற்றும் இழப்பீடு கேட்டு மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தார். அந்த மனுவில் தனக்கு சொந்தமான வயலில் 200 குழியில் நெல் சாகுபடி செய்துள்ளார். மழைக்காலங்களில் 3 தலைமுறையாக தனது கொல்லையின் வழியாக சென்று வடிகாலில் வடியும் நிலையில் வடிகால் முழுவதுமாக தூர்ந்து போய் உள்ளது. இதனால் தண்ணீர் வடியாமல் விவசாயி சாகுபடி செய்திருந்த நெற் பயிர்கள் மூழ்கி அழுகிவிட்டது. ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் எஞ்சிய பயிர்களை காப்பாற்றவும் இனிவரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வடிகாலை தூர்வாரி தர வேண்டும் என்றும், அழுகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News