தென்பழஞ்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு
தென்பழஞ்சியில் முன்விரோதம் காரணமாக கட்டுமான தொழிலாளி மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சரகம் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்பழஞ்சி கிழக்கு தெரு ஆதிதிராவிடர் காலணியில் வசித்து வரும் பரமன் என்பவரது இளைய மகன் முத்து முருகன் (27) கட்டுமான தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முத்து முருகன் வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில் அவரது மனைவி தேவி மற்றும் குழந்தைகள் உறவினர் நிகழ்ச்சிக்காக அலங்காநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்திற்கு சென்றுள்ளார்.
ஊருக்கு சென்ற தேவி கையில் வீட்டு சாவியை எடுத்துச் சென்றுள்ளார். இதனால் வேலை முடிந்து வந்த முத்து முருகன் வீடு பூட்டி இருந்ததால் இரவில் வீட்டு வாசலிலேயே படுத்து உறங்கி உள்ளார். இரவு 9:30 மணி அளவில் திடீரென முத்து முருகன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது முத்து முருகன் உடலில் தீ எரிந்த நிலையில் ஓடிவந்துள்ளார்.
அருகில் இருந்த உறவினர்கள் உடனடியாக உடலில் பற்றிய தீயை அணைத்தனர். இதில் முத்து முருகனுக்கு இடது பக்கம் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து விசாரித்த போது அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர் தன் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடியதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தப்பி ஓடியவர்களை துரத்தியபோது போது அவர்கள் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர். பின்னர் சம்பவம் தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த முத்து முருகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது அதே பகுதியில் வசித்து வரும் மாயகிருஷ்ணன் என்பவரது மகன் கண்ணனுக்கும் முத்து முருகனுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாகவும் இதனால் கண்ணன் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் மது பாட்டில் பெட்ரோல் நிரப்பி அதில் தீ வைத்து விசிசென்றதாகவும் முத்து முருகன் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த போது அவர்கள் தப்பி ஓடியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அப்படி ஓடிய கண்ணனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவில் வீட்டு முன் உறங்கிக் கொண்டிருந்த கட்டுமான தொழிலாளி மீது முன் விரோதம் காரணமாக பெட்ரோல் கொண்டு வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.