இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் பதிவு முகாம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வலைதளத்தில் இலவசமாக கணிணி பதிவு செய்து தரும் சிறப்பு முகாம் கள்ளகுறிச்சியில் நடைபெற்றது;
Update: 2024-01-29 09:28 GMT
கணினி முகாம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வலைதளத்தில் இலவசமாக கணிணி பதிவு செய்து தரும் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில் ஓட்டுநர் உரிமம் இல்லாத மாற்றுத் திறனாளிகள், பழகுனர் சான்று பெற மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, மருத்துவ படிவம், ரேஷன் மற்றும் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் புகைப்படம் 2, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கான உரிமை சான்றுகளுடன் அரசு போக்குவரத்துதுறை மூலம் ஆன்லைனில் பதிவு செய்து உடனுக்குடன் சான்று வழங்கப்பட்டது. இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களுடன் நேரில் வந்த 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயனடைந்தனர். முகாம் பணிகளை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் ஒருங்கிணைத்தனர்.