பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை
தர்மபுரி மாவட்டம், வேடியப்பன் திட்டு பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-05-12 05:22 GMT
தர்மபுரி மாவட்டம், மற்றும் சட்டமன்ற தொகுதி நகராட்சிக்கு உட்பட்ட வேடியப்பன் திட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜவேல் பெட்ரோல் பங்க்கில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே வீட்டில் ராஜவேல் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழு வினர் அவரை பரிசோதித்த போது அவர் இறந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து தர்மபுரி நகர B1 போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.