அரசு ஊழியர் கொலை வழக்கில் சரணடைந்த உடற்கல்வி ஆசிரியர்
அரசு ஊழியர் கொலை வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கொலை தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது.
By : King 24x7 Angel
Update: 2024-02-07 09:17 GMT
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே மைலோடு பகுதி சேர்ந்த சேவியர் குமார் கொலை வழக்கில் பாதிரியார் ராபின்சன், வழக்கறிஞர் ரமேஷ் பாபு ஆகியோர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர். இரண்டு பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக பங்கு பேரவை துணைத் தலைவர் ஜஸ்டஸ் ரோக், வின்சென்ட் உட்பட 3 பேரை ஏற்கனவே கைது செய்தனர். கைதானவர்கள் மற்றும் சரணடைந்தவர்களிடம் நடந்த விசாரணை அடிப்படையில் மேல் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த மயிலோடு பகுதியை சேர்ந்த சோனிஸ் (36) என்ற உடற்கல்வி ஆசிரியர் நேற்று முன்தினம் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இவர் இன்று 7-ம் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட உள்ளார். அப்போது அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த இரணியல் போலீசார் மனு தக்கல் செய்து, காவலில் எடுத்து விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது. சேவியர்குமார் கொலை தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.