விருதுநகரில் காவல்துறைக்கான உடல் தகுதி தேர்வு வரும் 9ஆம் தேதிக்கு மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த காவல்துறைக்கான உடல் தகுதி தேர்வு வரும் 9ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Update: 2024-02-07 09:59 GMT
விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்புத்துறை பணியிடங்களுக்கு உடற்தகுதி தேர்வு நேற்று நடைப்பெற்றது. இதில் பங்கேற்ற 430 பேரில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு, 1500 மீ ஒட்டம் ஆகியவற்றில் 284 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு வரும் 7 ஆம் தேதி உடல் திறனாய்வு தேர்வு விருதுநகர் கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 419 தேர்வர்களுக்கு நடைபெறுவதாக இருந்த உடல்தகுதி தேர்வு நிர்வாக காரணங்களுக்காக பிப். 9 க்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பிப். 10 ல் உடல் திறனாய்வு தேர்வு நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவிக்கப்பட்டுள்ளது.