தேனியில் அதிமுக தேர்தல் அலுவலக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
தேனியில் அதிமுக தேர்தல் அலுவலக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-24 11:03 GMT
முகூர்த்த கால் நடும் நிகழ்வு
அதிமுக தேர்தல் அலுவலக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி. தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக திரு. நாராயணசாமி அவர்கள் போட்டியிடும் நிலையில்,தேர்தல் அலுவலகம் பழனிசெட்டிபட்டி கண்ணம்மா ரெஸ்டாரண்ட் பின்புறம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோ டை ராமர்,முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி. கணேசன்,கழக வேட்பாளர் திரு நாராயணசாமி குடும்பத்தார்,தேனி நகர் கழக செயலாளர் கிருஷ்ணகுமார்,
பழனிசெட்டிபட்டி பேரூர் கழக செயலாளர் தீபன் சக்கரவர்த்தி,தேனி மேற்கு ஒன்றிய செயலாளர் தயாளன், தேனி நகர கழக துணை செயலாளர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.