பெரம்பலூர் : கொத்தடிமை ஒழிப்பு உறுதிமொழி

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

Update: 2024-02-10 01:02 GMT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் பிப்ரவரி 9ஆம் தேதி ஏற்றுக்கொண்டனர்.

உறுதி மொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் வாசிக்க, அதனைத் தொடர்ந்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து , கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்கள் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா, மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மேலாளர் சிவா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News