சங்கரன்கோவிலில் விபத்தில் காயமடைந்த பாமக நிா்வாகி உயிரிழப்பு

சங்கரன்கோவிலில் விபத்தில் காயமடைந்த பாமக நிா்வாகி உயிரிழந்தார்.

Update: 2024-05-04 08:44 GMT
சங்கரன்கோவிலில் விபத்தில் காயமடைந்த பாமக நிா்வாகி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள கோமதிமுத்துபுரத்தைச் சோ்ந்த செல்லையா மகன் வேல்சாமி (54). நகர பாமக செயலா். வடமலாபுரம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்தாா்.

நொச்சிகுளம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அவருக்கு தெரிந்த தங்கராஜ் மகன் மதுரம்(50) என்பவா் சங்கரன்கோவில் செல்வதற்காக நின்று கொண்டிருந்தாராம். அவரை சங்கரன்கோவிலில் இறக்கி விடுவதற்காக தனது பைக்கில் வேல்சாமி ஏற்றிக்கொண்டு சென்றாராம். சங்கரன்கோவில் சுரண்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த அவா்களை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் இருவரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு வேல்சாமி உயிரிழந்தாா். இதுகுறித்து சங்கரன்கோவில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும் விபத்துக்கு காரணமான அடையாளம் தெரியாத வாகனத்தை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

Tags:    

Similar News