திருவலஞ்சுழியில் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
திருவலஞ்சுழி எழுமாந்திடல் பகுதியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் நரிக்குறவர் இனமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டா.
Update: 2024-04-11 06:57 GMT
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி எழுமாந்திடல் பகுதியில் நரிக்குறவர் இனமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி எழுமாந்திடல் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனமக்கள் வாழும் பகுதிக்கு நேரில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சால்வை அணிவித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அடிப்படை தேவைகளையும் வெற்றி பெற்ற 60நாளில் நிறைவேற்றிக் தரப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து அப்பகுதியில் அவர்கள் வழிபடும் குல தெய்வமான புற்று மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார். கடந்த வருடம் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடத்தி வைத்த 90ஜோடிகளுக்கான இலவச திருமணத்தில் 5க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இணத்தை சேர்ந்த ஜோடிகள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.