டீ, வடை விற்று பாமக வேட்பாளர் பிரசாரம்

கும்பகோணம் அருகே திருப்பரம்பியத்தில் டீ, போன்டா, வடை விற்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க ஸ்டாலின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.;

Update: 2024-04-14 07:48 GMT
 தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ம.க‌.ஸ்டாலின் தொகுதி முழுவதும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் .கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் பகுதியில் பிரச்சார மேற்கொண்ட போது அங்குள்ள ராஜா, குமார் ஆகியோரின் டீக்கடையில் வேட்பாளர் ம. க ஸ்டாலின் தனது கையால் இனிப்பு, போண்டா, வடை உள்ளிட்டவற்றை தயார் செய்தும் டீ போட்டும் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கினார். தொடர்ந்து கடையின் உரிமையாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து துண்டு பிரச்சுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Tags:    

Similar News