கும்பகோணத்தில் பாமக தேர்தல் பிரச்சாரம்

கைத்தறி வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என கும்பகோணத்தில் நெசவாளர்களுக்கு பாமக வேட்பாளர் மக.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

Update: 2024-04-17 08:41 GMT

கைத்தறியில் பட்டு ரகங்கள் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் பேசி, நெசவாளர்களின் துயர் துடைக்க பாடுபடுவேன், கும்பகோணத்தில் தறியில் அமர்ந்து பட்டு சேலை நெய்து நெசவாளர்களுக்கு பாமக வேட்பாளர் மக.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் பிஜேபி கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மக.ஸ்டாலின் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு கேட்டு கும்பகோணத்தில் தாராசுரம் பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.. ** மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிகூட்டணியில், போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் மக.ஸ்டாலின், கும்பகோணத்தில், தாராசுரம் பகுதியில் நெசவாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்த வாகனத்தில் நின்று, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், பொதுமக்கள் மற்றும் நெசவாளர்கள் சால்வைகள் அணிவித்தும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் மலர்கள் தூவியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது நெசவாளர் வீட்டுக்கு சென்ற ஸ்டாலின், பட்டு தறியில் அமர்ந்து பட்டு சேலை நெய்து நெசவாளரிடம் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் நெசவாளர்களிடம் பேசுகையில், மயிலாடுதுறை தொகுதியில் என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

கைத்தறியில் நெய்யப்படும் பட்டு சேலைகள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நெசவாளர்களுக்கு தேவையான, கச்சா பொருட்கள் கிடைக்கவும், மத்திய அரசின் சலுகைகளை பெற்றுத் தரவும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியிடம், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜி கே வாசன், டாக்டர் அன்புமணி ஆகியோரின் உதவியோடு பேசி, நடவடிக்கை எடுப்போம் எனவும், வாக்குறுதி கொடுத்து நெசவாளர்களிடம் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் செந்தில், சாரங்கன், குருமூர்த்தி, பாலகுரு,பொன்ராஜ்,உள்ளிட்ட ஏராளமானோர் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags:    

Similar News