பாமக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

Update: 2023-12-06 07:10 GMT

வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி அழகாபுரம் பகுதி, 4-வது வார்டு செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் குட்டத்தெரு சமுதாய கூடத்தில் நடந்தது. வார்டு தலைவர் அய்யனார் தலைமை தாங்கினார். செயலாளர் பெருமாள் வரவேற்று பேசினார். பகுதி செயலாளர் நடராஜன், தலைவர் வெள்ளையன், பொருளாளர் உஷாராணி கணேசன், அழகாபுரம் பகுதி துணை தலைவர் ரத்தினவேல், ராஜா, அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ., மாநகர மாவட்ட தலைவர் கதிர்.ராசரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து விளக்கம் அளித்து பேசினர். தொடர்ந்து அஸ்தம்பட்டி பகுதிக்குட்பட்ட வார்டுகளில் வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலை ஆய்வு நடத்தினர். பின்னர் குட்ட தெருவில் வசித்து வரும் மக்களை அருள் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். அப்போது அவர்கள் சாலை, கழிப்–பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்களிடம் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News