திருக்கோவிலூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய வியாபாரிகளின் பின்னணியில் உள்ள திமுக எம்.எல்.ஏக்களை கைது செய்ய வலியுறுத்தி திருக்கோவிலூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-06-24 05:48 GMT
திருக்கோவிலுார், சந்தைப்பேட்டை புறவழிச் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிழக்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், ஜோதி, சேகர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கள்ளச்சாராய வியாபாரிகளின் பின்னணியில் உள்ள ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரையும் திருக்கோவிலுார் போலீசார் கைது செய்தனர்.