போக்ஸோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நிலக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2024-05-27 06:49 GMT

மாவட்ட ஆட்சியர் பூங்கொடி 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நிலக்கோட்டையை அடுத்த விருவீடு பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து (35) என்பவரை கடந்த 3 ஆம் தேதி போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்நிலையில் இவரது குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News