கல்லூரி முதல்வர் மீது போக்சோ வழக்கு
சேலத்தில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட கல்லூரி முதல்வர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-03-29 09:08 GMT
சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருபவர் பாலாஜி (வயது 52). இதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவி கல்லூரி முதல்வர் தன்னை சில்மிஷம் செய்ததாக புகார் கூறினார். இது குறித்து விசாரணை நடத்தும்படி போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.
அதன்பேரில் அன்னதானப்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் ராமமூர்த்தி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இந்த நிலையில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார், கல்லூரி முதல்வர் பாலாஜி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.