போக்சோவில் கைதானவர் குண்டாசில் அடைப்பு

திருக்கோவிலுாரில் போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.

Update: 2024-05-29 10:44 GMT

பைல் படம்

போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது. திருக்கோவிலுார் பெருமாள் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்,54; இவர், 14 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தொடர்பாக திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இந்நிலையில் ரமேஷ் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டதால், ஜாமினில் வெளியே வந்தால் தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., சமய்சிங் மீனா பரிந்துரையை ஏற்று கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை கடலுார் மத்திய சிறையில் உள்ள ரமேஷிடம், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழங்கினர்.

Tags:    

Similar News