ஓட்டுசாவடி மையங்களில் சாய்வு தளம் குறித்து ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி ஓட்டுசாவடி மையங்களில் சாய்வு தளம் குறித்து ஆய்வு;

Update: 2024-03-11 04:27 GMT

ஓட்டுசாவடி மையம் 

லோக்சபா தேர்தலையொட்டி ஓட்டுசாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்காக சாய்வு தளம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி பள்ளிகள், சமுதாயம் கூடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓட்டுசாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்து செல்ல முடியாத மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்கும் வகையில் படிகள் இன்றி சாய்வு தளம் அமைக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்தனர். சாய்வு தளம் இல்லாத ஓட்டுசாவடி மையங்களில் சாய்வு தளம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஓட்டுசாவடியில் சாய்வு தளம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஓட்டுச் சாவடிக்கு அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளம் சக்கர நாற்காலி சென்று வரும் வகையில் உள்ளதா என்பது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமையில் முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News