திருட்டு வழக்கில் கைதானவர் மீது போலீசார் தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவரை காவல்துறையினர் மதுவை வாயில் ஊற்றி கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பலத்த காயமடைந்த அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Update: 2024-07-04 06:59 GMT

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாண்டியன் 

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட விச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரை மணமேல்குடி காவல் துறையினர் திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரித்துள்ளனர் அப்பொழுது விசாரணையின் போது பலமாக தாக்கியுள்ளனர் மேலும் ஆர் எஸ் பதி குச்சியை கவட்டையில் வைத்தும் அடித்துள்ளனர் வலிதாங்காமல் மயங்கி விழுந்த பாண்டியனை மீண்டும் எழுப்பி அவர் வாயில் மதுவை ஊற்றி மீண்டும் அடுத்த தொடங்கியுள்ளனர் இதனால் வலி தாங்காமல் பாண்டியன் அலறி உள்ளார்.

உடனடியாக அவரது தந்தைக்கு தகவல் கொடுத்து அவரை கையில் குச்சியை கொடுத்து பாண்டியனை அடிக்க கூறியுள்ளனர் காவல்துறையினர் ஆனால் அவர் அடிக்கவில்லை உடனே பாண்டியனை அவரது தகப்பனாரை அடிக்க சொல்லி கூறி உள்ளனர் அவரும் அடித்துள்ளார் மேலும் கன்னம் முதுகு இடுப்பு கால் ஆகிய பகுதிகளில் கடுமையாக தாக்கி உள்ளனர் மேலும் தலைகீழாக தொங்க விட்டும் அடித்துள்ளனர் இந்நிலையில் அவரை மேலும் காலால் அடிப்பட்ட இடத்திலேயே மிதித்து உள்ளனர் .

அப்பொழுது வலி தாங்காமல் பாண்டியன் அழுதுள்ளார் இதனை எடுத்து அவரை ஆலங்குடி கூட்டி வந்துள்ளனர் அங்கு அவர் மீது கஞ்சா வழக்கு பதியப்பட்டது பின்னர் புதுக்கோட்டை சிறைச்சாலைக்கு அழைத்து வந்துள்ளனர்.  சிறைச்சாலையில் உள்ளவர்கள் பாண்டியன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான். இவரை எப்படி உள்ளே அனுமதிப்பது  என கூறியுள்ளனர். காவல்துறையினர் அவரை  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விட்டு சென்று விட்டனர்

மேலும் இதுபற்றி  பாண்டியன் கூறுகையில் என்னுடைய இரு சக்கரம் மூன்று செல்போன்கள் ஆகியவற்றை காவல்துறையினர் வைத்துள்ளனர் இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இவருடைய காயத்தை பார்த்து சிறைச்சாலையில் உள்ள காவல்துறையில் கேட்டதற்கு காவல்துறையினர் பந்தயத்தில் மாட்டு வண்டி பந்தையிலிருந்து கீழே விழுந்தது மாதிரி கூறுமாறு கூறியுள்ளனர். மேலும் வேறு ஏதாவது கூறினால் உன்னை கொன்று விடுவோம் எனவும் மிரட்டி உள்ளதாக தெரிய வருகிறது மேலும் தற்பொழுது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவர சிகிச்சையில் பாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

Tags:    

Similar News