பேருந்து பயணிகளுக்கு போலீசார் பாதுகாப்பு விழிப்புணர்வு

Update: 2023-11-07 07:22 GMT

பயணிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி, பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினரால் பயணிகளிடையே பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, சென்னை, அரியலூர், துறையூர் போன்ற வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் போது அதனை பயன்படுத்தி திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளதால் அதனை தடுக்கும் பொருட்டு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன்படி பேருந்தில் பயணிக்கும் திருடர்கள் அருகில் உள்ளவர்கள் மற்றும் பயணத்தின் போது உறங்கும் பயணிகளிடமிருந்து பொருட்கள் நகைகள் போன்ற உடைமைகளை திருடிச்சென்றுவிடுவார்கள் எனவே பேருந்தில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கவனமாகவும் முடிந்தளவிற்கு விலை உயர்ந்த பொருட்களை கொண்டு செல்லும்போது கவனமாகவும் விழிப்புடனும் கொண்டு செல்லுமாறு அறிவுரைகள் வழங்கினர். மேலும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் பேருந்துகளில் பயணிகளிடையே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் காவல்துறையினர் பயணிகளுடன் சீருடை அணியாமல் மக்களோடு மக்களாக பயணித்தும் வருகின்றனர். மேலும் முக்கியமாக தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பட்டாசுகளை பயணம் செய்யும் பேருந்தில் எடுத்து செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News