தேனி : காவல்துறை சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
தேனி மாவட்ட காவல்துறை சார்ப்பில் போதை பொருள் தடுப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையின் சார்பாக போதை பொருள் தடுப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி மேற்கு தொடர்ச்சி மலை மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் 2, 4, 8, 6, 10, 21 கிலோமீட்டர் தூரத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 1000,த்திற்க்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாரத்தான் போட்டியை தேனி மாவட்ட ஆட்சியர் சஞ்சீவனா, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இப்போட்டியில் பங்கேற்ற மாரத்தான் வீரர்கள் இலக்கை நோக்கி ஓடிச் சென்று திரும்பி துவங்கிய இடத்திற்கு வந்து சேர்ந்த, முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு 3000 ரூபாய், 2000 ரூபாய், 1000 ரூபாய் என ரொக்க பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினர். மேலும் பங்கேற்ற அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் இப்போோட்டியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.