கோவில் ஊர்வலத்தில் தேர் இழுக்க போலீஸ்  தடை - அனுமதிக்ககோரி பொது மக்கள் போராட்டம்

கொல்லங்கோடு அருகே கோவில் ஊர்வலத்தில் தேர் இழுக்க போலீஸ்  தடை - அனுமதிக்ககோரி பொது மக்கள் போராட்டம்

Update: 2024-02-10 08:39 GMT
பேச்சுவார்த்தை நடத்திய ஏ எஸ் பி பிரவீன் கெளதம்
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சங்குருட்டி பகுதியில் கிருஷ்ணசாமி கோவில் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 3 மணி அளவில் கொல்லங்கோடு அருகே மேட விளாகம், இரயுமன்தோப்பு சுப்பிரமணிய கோவிலில் இருந்து மேளதாளத்துடன் தாலப்பொலி, தேர் உட்பட பல்வேறு கலை அம்சத்துடன் கூடிய ஊர்வலம் புறப்பட்டு இரவு சங்குருட்டி கிருஷ்ணசாமி கோவில் வருவதாக தீர்மானிக்கப்பட்டது. ஆனால்  கடந்த காலங்களில் ஊர்வலத்தின் போது தேர் இழுக்கப்படவில்லை. ஆகையால் இந்த வருடமும் தேர் இல்லாமல் ஊர்வலம் நடத்தலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அதே வேளையில்  ஊர்வலத்தில் தேர் இழுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் திறப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு போலீஸ் அனுமதி மறுத்ததால்,  பக்தர்கள் மேடவளாகம் இரயுமன் தோப்பு சுப்பிரமணியசுவாமி கோவில் முன்பாகவும், கண்ணனாகம் சந்திப்பிலும், சங்குருட்டி கிருஷ்ணசாமி கோவில் முன்பாகவும் திரண்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் இரவு 7 மணி அளவில் குளச்சல் ஏ எஸ் பி பிரவீன் கௌதம் சம்பவ இடம் வந்து சங்குருட்டி கிருஷ்ணசாமி கோயில் நிர்வாகிகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு  பின்பு தேர் இல்லாமல் ஊர்வலம் நடத்துவது என்று கோயில் நிர்வாக தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இரவு 9 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு  சென்றது.
Tags:    

Similar News