போலி பாஸ்போர்ட் வழக்கில் காவல்துறை எழுத்தர் தலைமறைவு
போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
Update: 2024-02-14 07:03 GMT
தஞ்சாவூர் மாவட்டம் ராஜூ என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக் யகல் செய்த மனுவில், "நான் நடத்தும் இ சேவை மையம் வழியாக, பாஸ்போர்ட் விண்ணப்பித்த ஒருவர், போலியான முகவரி, ஆவணங்களைத் தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதற்காக என் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, என்னை சிறையில் அடைத்தனர். பாஸ்போர்ட் எடுத்த நபருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதி தண்டபாணி முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, "போலியாக பாஸ்போர்ட் பெறுவது என்பது காவல்துறையினர் உதவியின்றி சாத்தியம் இல்லை. இது தொடர்பாக விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் மனுதாரர், 48 பாஸ்போர்ட் பெற போலி ஆவணங்களை வைத்து விண்ணப்பித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கையைச் சார்ந்தவர்களுக்கு இந்திய பாஸ் போர்ட் எடுக்க போலி ஆதார்அட்டைகள், போலி ஆவணங்கள் தயார் செய்து பாஸ்போர்ட் விண்ணப்பித்துள்ளனர். இவருக்கு உதவியாக பட்டுக்கோட்டை அருகே சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமறைவாக உள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை தொடர்கிறது" என்றார். அரசு வழக்கறிஞர் வாதத்தை நீதிபதி, பதிவு செய்து கொண்டு, மனுதாரர் 60 நாட்களுக்கும் அதிகமாக சிறையில் உள்ளதால், அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து முடித்து வைத்தார்.