பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள் கைது!
திண்டுக்கல்லில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்ற 2 பைக்குகள் பறிமுதல் செய்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-19 09:44 GMT
இளைஞர்கள் கைது
திண்டுக்கல் நகர் பகுதியில் பைக்கில் ரேஸில் செல்வது போல் அதிவேகமாக இளைஞர்கள் சென்றனர். பைக்கில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் மாட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் சென்ற செந்தில்குமார், ஷியாம் ஆகிய 2 பேரை நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி, சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் பிடித்தனர்.அவர்களின் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல் நகர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் மாட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்கள் பைக்குகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.